கோவையில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழை

கோவை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டிவரும் நிலையில் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் மழை பொழிந்து குளிர்வித்து வருகிறது.



இதனிடையே, இன்று கோவையின் சிங்காநல்லூர், பீளமேடு, இராமநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மேலும், காந்திபுரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.



சுமார், 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருச்சி சாலையில் அமைந்துள்ள பர்க்ஸ் பள்ளியின் அருகே மரம் முறிந்து கீழே விழுந்தது. மேலும், பல இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், கோவை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மழை நீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதியிலேயே தேங்கின. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...