பொள்ளாச்சி: புறநானூறு செய்யுளை மாற்றி எழுதிய மாணவரை அடித்த தமிழ் ஆசிரியர் கைது

பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் புறநானூறு செய்யுளை மாற்றி எழுதிய 12ஆம் வகுப்பு மாணவரை தாக்கிய தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள லதாங்கி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர், புறநானூறு செய்யுளை மாற்றி எழுதிய 12ஆம் வகுப்பு மாணவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள இந்த தனியார் பள்ளியில், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, புறநானூறு செய்யுளை எழுதுமாறு கூறினார். அப்போது, 17 வயதான ஒரு மாணவர் அந்த செய்யுளை மாற்றி எழுதியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ஆசிரியர் சுரேஷ்குமார், அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்து, வயிற்றுப் பகுதியில் குத்தி, தேர்வு எழுதும் அட்டையால் முதுகில் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வலி தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட மாணவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் ஆசிரியர் சுரேஷ்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் வைத்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...