கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை ராஜவீதி பகுதியில் அமைந்திருக்கும் கோவை துணி வணிகர் சங்க (CCMA) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைட் சார்பில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைடின் தலைவர் மணிகண்டன் மற்றும் செயலாளர் செந்தில் வேலன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு ஜூனியர் ரெட் கிராஸ், தமிழ்நாடு சாரணர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், தற்போதும் தனது பையில் தன் ஆசிரியரின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும், தானும் ஒரு ஆசிரியர் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் நம் வாழ்வின் ஆணிவேர் என்பதை உணர்ந்து அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தனது ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஆணையாளர், தன் வெற்றியில் அவரது ஆசிரியர் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தொடர்ந்து, 2023-24 கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், நாடகம், பாடல் உள்ளிட்ட மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...