7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சியிலிருந்து கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் 2.5 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது. குழந்தையின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக கோவையை நோக்கி பயணித்தது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், "வேகத்தடை மற்றும் பள்ளமான இடங்களில் எச்சரிக்கையாக செல்லும்படி ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், "குழந்தையை பரிசோதித்து பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம். பிறந்து ஏழே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம். ஏற்கனவே, பிறந்து ஐந்தே நாளான குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. சிறப்பான மருத்துவ நிபுணர் குழு இருப்பதால், விரைவாக குழந்தை வந்தடைந்ததால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...