இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் பட்டா வழங்கப்பட்ட பெண்கள், வீடு கட்ட முயற்சிக்கும்போது எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சுமார் 12 மணியளவில் வித்தியாசமான காட்சி ஒன்று அரங்கேறியது. இறுதிச்சடங்கு கோலத்தில் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிதாக பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முயற்சிக்கும் போது, ஏற்கனவே அங்கு வசிப்பவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் அணியும் வெள்ளை ஆடையில், தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறுவதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுமாறு திருப்பி அனுப்புவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...