கோவை ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை: விரைவில் திறப்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1 டன் எடையுள்ள இந்த சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குளக்கரைகள் புனரமைப்பு, பொழுதுபோக்கு அமசங்கள் ஏற்படுத்துதல், 24 மணி நேர குடிநீர்த் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்தம், மாதிரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் தனியார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரேஸ்கோர்ஸ் பகுதியில் குதிரைப் பந்தயத்தை நினைவுகூறும் வகையில், ஏற்கெனவே குதிரைச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் குதிரை சிலை அமைந்துள்ள இடத்தின் மறுபகுதியில் மக்களைக் கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபைபர், அலுமினியம், வெண்கலம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிலையின் எடை 1 டன். இச்சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது," என்று தெரிவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு காளை சிலை அமைப்பதன் மூலம், கோவை நகரின் அழகு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...