கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் தொடக்கம்

கோவையில் ஆகஸ்ட் 30 முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற வீரர்களுக்கு உதவும் என தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் தெரிவித்தார்.



கோவை: கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சக்தி சுகர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.



தமிழ்நாடு செஸ் அசோசியேசன் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் கூறுகையில், "2400 பாயிண்டுகள் மற்றும் மூன்று டைட்டில் வாங்கும் வீரருக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பதவி வரும். அதை பெறுபவர்கள் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. அதற்கு முன்பாக 100 இன்டர்நேஷனல் மாஸ்டர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் கடந்த ஒரு வருடமாக இந்த டோர்னமெண்டை நடத்தி வருகிறோம்," என்றார்.

இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவில் 33 நார்ம்ஸ் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மட்டும் 13 நார்ம்ஸ் வாங்கியுள்ளது. மீதியுள்ளதில் 6 நார்ம்ஸ் இந்தியாவிலும் மற்றவைகளை வெளிநாட்டவரும் வாங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள நார்ம்ஸில் மூன்றில் இரண்டு பங்கை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த டோர்னமெண்ட் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு பேர் இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டிலை வாங்கி உள்ளனர்.

கோவையில் மட்டும் 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும் இதில் 100 முதல் 120 பேர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதாகவும் செஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவித்து வருவதாகவும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு அசோசியேஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 30 கிராண்ட் மாஸ்டர்கள் இருப்பதாகவும் அடுத்து எட்டு ஆண்டுகளில் 100 கிராண்ட் மாஸ்டர்கள் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...