வெள்ளலூர் குப்பை கிடங்கு: செப்டம்பர் 3க்குள் நிரந்தர தீர்வு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு நிரந்தர தீர்வு காண செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை கோவை மாநகராட்சி பின்பற்றவில்லை. ஒரு ஆண்டில் குப்பை கிடங்கிற்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என கொடுத்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் 2022ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு சென்னை பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற விசாரணையில், ஆறு ஆண்டுகளாகியும் குப்பைகளை அகற்றாதது குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. இது குறித்து தெளிவான விரிவான அறிக்கையை அடுத்த விசாரணைக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான தீர்வை எட்ட வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளருக்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 3 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாநகராட்சி, 36 இடங்களில் MCC (Micro Composting Centre) ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் 5 டன் அளவுள்ள குப்பைகளை மேலாண்மை செய்வதாக தவறான தகவலை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது 81 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துவிட்டதாக கோவை மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் மேலும் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த விசாரணைக்கு முன்பாக கோவை மாநகராட்சி கால நிர்ணயத்துடன் கூடிய செயல் திட்ட அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...