பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

கோவையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 64 துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.



இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...