மின்னணு குடும்ப அட்டைகளை இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் புதிய விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியிணை முதலமைச்சர் துவக்கிவைத்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...