மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதிகள், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் 500 அடி தூரத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 3200 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கப்பெற்று வந்த வருவாயில் 25 சதவீதம் இழப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை நகராட்சி சாலையாக மாற்றுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்தது.

இந்தச் சூழலில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, சாலையை மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதிகள், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாநில நெடுஞ்சாலைகளை மாற்றிக் கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...