கோவையில் தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையர் ஆலோசனை

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில், தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகவும், அதன்படி தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12.08.2024 முதல் 17.08.2024 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மழை தொடர்பான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையிலும் கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தினார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் விரைவாக தூய்மை பணியினை மேற்கொள்ளுவதுடன், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்துவதற்கு சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் K சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் (பொ) மருபூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், துணை தலைமைப் பொறியாளர்கள், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...