முழுஅடைப்பில் தமிழகம்..! வெறிச்சோடிய கோவை..!



தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் காய்கறி மார்கெட், பழக்கடை, நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்டு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உட்பட நகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளது.



முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், லாரிகள் இயங்காத காரணத்தால் கோவை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, கோவையில் அரசுப் பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...