அழிவின் விளிம்பில் தென்னை மரங்கள்- மாதம்பட்டி விவசாயிகள் கவலை

தமிழகத்தில் நிலவும் வறட்சியால் தேங்காய் உற்பத்தி குறைந்து லட்சக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் தேங்காய் உற்பத்தியை பொருத்தவரை தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பருவமழை குறைந்து தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், தேங்காய் உற்பத்தி பெருமளவு குறைந்து, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 



இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் அதிகப்படியாக தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தென்னை மரம் 30 மீட்டர் வரை வளரக் கூடியது. தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.

தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காயிலிருந்து கிடைக்கும் புரதப்பகுதி மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இதற்கு நீர்த்தேவை அதிகம். தட்ப வெப்பநிலையை பொறுத்து இடத்திற்கு இடம் நீர்த்தேவை மாறுபடும். கோடை காலத்தில் அதிக வெப்பநிலையாலும், காற்றின் குறைந்த ஈரப்பதத்தாலும் மண்ணிலிருந்தும் பயிர்களிலிருந்தும் அதிகளவு நீர் ஆவியாகி வறட்சி ஏற்படும். சொட்டுநீர் பாசனமுறையில் நீர் பாய்ச்சினால் தென்னைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80 லிட்டர் நீர் தேவைப்படும். முதல் இரண்டு வருடங்களுக்கு, 4 நாட்களுக்கு ஒரு முறை கன்றுக்கு 45 லிட்டர் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள இடங்களில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். 

விவசாயத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாதம்பட்டி:







தமிழ்நாட்டில், பல மாவட்டங்களில் வறட்சி காரணமாக விவசாயம் முற்றிலும் அழிந்து வரும் அபாயம் ஏற்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள மாதம்பட்டியில் தென்னை விவசாயம் கவலைக்கிடமாக உள்ளது. தென்னை விவசாயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவை. ஆனால், வறட்சி காரணமாக 1,000 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தற்போது தண்ணீர் இல்லை.



கோவையில் நொய்யல் ஆற்றின் வறட்சியாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், பரவலாக தென்னை மரங்களில் காய்ப்பு நின்றுவிட்டது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகம் இருக்கும். ஆனால், இந்தாண்டு அந்த 2 மாதங்களிலும் மிகவும் குறைவான அளவுக்கே தேங்காய் அறுவடை இருக்கும். தட்டுப்பாடு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு தேங்காய் விலை உயரும். மேலும், வறட்சியில் சிக்கி 50 சதவிகித அளவுக்கு தென்னை மரங்கள் பட்டுப்போகக் கூடும். சுமார் 30 சதவிகித மரங்களில் காய்ப்பு நின்றுவிடும் அபாயமும் உள்ளது.



தென்னை என்பது நெல்லைப் போன்று 120 நாட்களில் நமக்கு பலனை அளிக்காது. குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துதான் அதன் பயன் கிடைக்கும். எனவே, தென்னை மரங்கள் பட்டுப்போகும் போது தமிழகம் தேங்காய் உற்பத்தியில் பின்னடைவை சந்திக்கும்.



தென்னை மரத்தின் வறட்சியின் அறிகுறிகள்: 

தென்னை மரத்தில் முற்றிய அடிஓலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும். நடு மற்றும் நுனி இலைகள் வாடி வதங்கி கீழ்நோக்கி தொங்கும். புதிய குருத்தோலைகள், புதிய பாளைகள் தோன்றுவது தாமதமாகும். பாளைகளில் பெண் பூக்களில் மகரந்தசேர்க்கை ஏற்படாமல் கருகி உதிர்ந்துவிடும். குரும்பைகள் அதிகமாக உதிரும். வறட்சியால் பாதிக்கப்படும் மரங்களின் நுனி சிறுத்து மரமே காய்ந்து விடும்.

இதனை தவிர்க்க கோடையில் மரத்தை சுற்றி 2- 3 மீட்டர் உயரத்திற்கு சுண்ணாம்பு பூசலாம். இம்முறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால் கோடை வெப்பத்தில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கலாம்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...