கோவை ஆர்.எஸ்.புரம் அருகே அரிசி மண்டி கடையில் பெண் வியாபாரியிடம் லேப்டாப் திருட்டு

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே அரிசி மண்டி கடையில் வாடிக்கையாளர் போல நடித்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், பெண் வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பி லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள சிரியன் சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (47) என்ற பெண் வியாபாரி, வி. சி. எம். ரோட்டில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 6 அன்று, 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் கடைக்கு வந்து இட்லி அரிசி வாங்குவதாக கூறினார்.

ராஜேஸ்வரி அரிசி எடை போட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வாலிபர் கடையில் இருந்த எலக்ட்ரானிக் தராசை எடுக்க முயன்றார். ராஜேஸ்வரி கேள்வி கேட்டதும், தெரியாமல் கை பட்டுவிட்டதாக சமாளித்தார். பின்னர், அவர் 5 கிலோ பேக் ஏழு, 2 கிலோ பேக் 5 இட்லி அரிசி கேட்டார்.

ராஜேஸ்வரி அரிசி எடுக்க உள்ளே சென்றபோது, அந்த வாலிபர் கடையில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து ராஜேஸ்வரி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவனமாக அணுக வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களை உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...