ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் நிலம் கோவை மாநகராட்சியால் மீட்பு

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், சௌரிபாளையம், வார்டு-66, உடையம்பாளையம் சாலையில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.8 கோடி மதிப்பிலான 29.34 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வீரகேரளம், வார்டு-19, குறிச்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 26 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், வார்டு-19, குறிச்சி நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் இடங்களும், வடக்கு மண்டலம், துடியலூர், வார்டு- 3, சத்யா நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது. 

அதேப்போன்று, தெற்கு மண்டலம், குறிஞ்சி, வார்டு-94, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ1.4 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநந்தா புரம், வார்டு-74, சுமார் ரூ5.03 கோடி மதிப்பிலான 46.26 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும, இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...