கோவையில் பசுமை தேசம் சார்பில் இலவச துளசி நாற்றுகள்

கோவையில் பசுமை தேசம் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில் மக்களுக்கு இலவசமாக துளசி நாற்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுந்தராபுரம் திருமூர்த்தி கோவில் வளாகத்தில் 50 துளசி நாற்றுகள் வழங்கப்பட்டது.



இதுகுறித்து பசுமை தேசம் ராஜேந்தர் கூறுகையில், 

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும். ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள் தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை. இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை துளசிச் செடி தருகிறது.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

இதனை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும். பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் அல்லது 720 கோடி மூங்கில் மரங்கள் அல்லது 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும். துளசி நாற்றுக்களை வாங்க முன்பதிவிற்கு 9842275239 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்" என பசுமை தேசம் ராஜேந்தர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...