கோவையில் புதிய கிளையை துவக்கியது ஏபிசி கிளினிக் - பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே துவக்கி வைத்தார்.


ஆண், பெண் என இருபாலருக்கும் அழகுபடுத்திக் கொள்ளும் சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிளினிக்கின் எட்டாவது கிளையாக கோயம்புத்துாரில் துவக்கப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 



அடுத்த 15-18 மாதங்களில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 கிளினிக்குகளை துவக்க வேண்டும் என்ற விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கு துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஏபிசி கிளினிக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திருமல் ராஜ், கூறுகையில்; “சென்னையில் மற்றுமொரு கிளையோடு, கோவையில் 8வது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெங்களுரு, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட மேலும் 15 இடங்களில் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை அனைத்தும் அடுத்தடுத்த மாதங்களில் துவக்க உள்ளோம். இந்தியா முழுவதும் அழகு சிகிச்சைக்கு நல்ல தேவைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரிலும் சர்வதேச தரம் வாய்ந்த சேவையை எளிதாக கிடைக்கச் செய்வோம்.



ஏபிசி கிளினிக் துவக்கப்பட்ட 2015ம் ஆண்டிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கிளினிக்குகளில் அறிமுகம் செய்து வருகிறது. இதன் முக்கிய அம்சமே அதிநவீன அடிப்படை கட்டமைப்பு வசதியில், பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சையாளர்கள் தான். இந்தியாவில் துவக்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே வேகமான விற்பனையை பெற்றது. ஏபிசி கிளினிக் பெங்களுரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் வணிக வாய்ப்புகளை துவக்கியுள்ளது. பிற நகரங்களிலும் இந்த வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது.

அழகு பெற அறுவை சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவியும் அளிக்க வங்கி சாரா நிதி நிறுவனங்களுடனும் ஏபிசி கிளினிக் பங்குதாராக உள்ளது. பங்குதாரர்களுக்கு தொடர்ந்து அதிநவீன பயிற்சிகளை ஏபிசி கிளினிக் சர்வதேச அளவிலான அழகுதுறை டாக்டர்களைக் கொண்டு  அளித்து வருகிறது என்கிறார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...