அரசு தொழில்நுட்ப தேர்வு வருகிற மே மாதம் துவங்குவதை தொடர்ந்து தகுதியுடையவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் இம்மாதம் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்கம் சார்பில் 2017- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையற் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்ப தேர்விற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று துவங்கியதைத் தொடர்ந்து வரும் 26.4.2017 தேதி வரை (ஞாயிறு தவிர) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை, 'www.dge.tn.gov.in' என்ற, இணையதளத்தின் மூலம் அரசுத் தேர்வுகள் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
கோவையில், அசோகபுரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பதிவு செய்ய குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை தேர்வரிடம் நேரடியாக கொண்டு சென்று விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தேர்வர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்கள் யாவும் சரியானவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.