பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடியில் நான்கு வழிச்சாலை பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் இப்பணி காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலும், காட்டம்பட்டி முதல் நெகமம் வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிகளை நேற்று (ஜூலை 23) கோவை வட்டம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் அளவு மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். நான்கு வழிச்சாலை சிறப்பாக அமைய வேண்டிய முறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணச் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவடையும்போது, பொள்ளாச்சி-பல்லடம் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...