கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

கோவை குனியமுத்தூரில் சாலைகள் சேதம், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம். பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு.


கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாலக்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் 87வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர், வசந்தம் நகர், பி.கே.ஜி நகர் உட்பட வஹாப் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், குடிநீர் விநியோகமும் சரிவர கிடைக்கவில்லை என்றும், வரக்கூடிய குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.



இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த 87வது வார்டு திமுக கவுன்சிலர் பாபுவிடம் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை என்றும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த பலனும் இல்லாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.



சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை என்றும், வழுக்கி விழுந்து அடிபடுவதாகவும் பொதுமக்கள் கூறினர். மேலும், மக்களிடம் வாக்கு பெற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என்று யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதற்கும் மாநகராட்சி ஊழியர்கள் வராததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், மழைக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகளை செய்துதராத கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...