மாநகராட்சி பணிகள் குறித்து மேற்கு மண்டல பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்.நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் மனித கழிவுகள் மற்றும் சமயற்கழிவுகளைக் கொண்டு உயிரி எரிவாயுக் கூடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும், காயத்திரி கார்டன் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சிப் பூங்காவினையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பொதுமக்களிடம் தங்கள் வீடுகளில் தேவையற்ற பொருட்களை அகற்றும்படியும், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் ஏற்படாத வண்ணம் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். 



பின், என்.ஜி.ராமசாமி லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்களை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...