கோவை அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற 278 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளின் செவித்திறன், பேச்சுத்திறன் ஆராயப்பட்டு, பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பத்து வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டு வருகிறது.



இதுவரை 278 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக இன்று ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அவர்களுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேன்பட்டு இருக்கிறதா என்று ஆராயப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.



மேலும் அந்த கருவியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு செய் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



இந்த பயிற்சி முகாமை மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் A. நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து அக்குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த முகாமில் காது மூக்கு தொண்டை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவித்திறன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...