புலியகுளத்தில் குடியிருப்புகள் மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று வீடுகள் எரிந்து சேதம்


கோவை புலியகுளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் காவல் நிலையம் அருகே பஜார் வீதி என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீடுகளில் இன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், லட்சுமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தானது, அடுத்தடுத்துள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், அரை மணி நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயினை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் லட்சுமி, அந்தோனி அம்மாள், சகாயம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள தீயணைப்புதுறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து விட்டதாகவும், அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...