இயற்கை வளங்களை பாதுகாக்காவிடின் கோவையிலும் வெப்ப காற்று வீசும் : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் பேட்டி


பருவமழை பொய்த்து தமிழக மக்கள் வாடிக்கொண்டிருந்த நேரத்தில், மேலும் சுமையாய் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகப்படியான வெப்பம் நிலவிவருகிறது. எந்நாளும் குளுகுளு வென வாழ்ந்து பழகிய கோவை மக்களையும் வெப்பம் விட்டு வைக்கவில்லை. நிலவிவரும் இந்த வெப்பத்தால் நிழல்களை தேடி ஓடி ஒதுங்கும் அளவிற்கு கோவை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) அனல் காற்று வீசும் வாய்ப்புகள் இருப்பதால் 20 மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்த பட்டியலில் இருந்து கோவை மாவட்டம் தப்பிவிட்டது. ஆனால், தற்போது நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை முறையாக பராமரிக்காவிட்டால் விரைவில் கோவையிலும் இது போன்ற எச்சரிக்கை செய்தி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக  கோவை வேளாண்மை பல்கலைக் கழக, காலநிலை ஆரய்ச்சி மையத்தின் துறை தலைவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆரய்ச்சி மைய துரையின் தலைவர் பன்னீர் செல்வம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பெட்டியில் கூறியதாவது :-

முந்தய ஆண்டுகளின் கணக்கீடுகளின் படி, கோவையில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்தின்  இரண்டாவது வாரம்வ ரையில் இருக்கும். அதன் பின்னர், அப்டிப்படியாக வெப்பம் குறையும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கோவையில் முன்னதாகவே தொடங்கும் கோடைகாலம் முன்னதாகவே முடிந்து விடுகிறது. நடப்பு ஆண்டியில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே கோடை காலம் தொடங்கிவிட்டது. நடப்பு ஆண்டியில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே கோடை காலம் தொடங்கிவிட்டது. 

வெப்பம்-வரலாறு

கோவை  மாவட்டத்தில் மிக அதிகமான வெப்பம் நிலவிய வரலாறு உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு ஏபரல் மாதம் 22-ம் தேதி கோவை மாவட்டத்தில் 42.6 டிகிரி (108 டிகிரி பாரன் ஹீட் ) வெப்பம் இருந்துள்ளது. கோவையின் வரலாற்றில் மிக அதிகமான வெப்பமாக அன்றைய வெப்பநிலைதான் இருந்து வருகிறது. அதற்குப்பின் 101 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் கோவையின் அதிகபட்ச வெப்பமாக இருக்கிறது. 

முந்தய ஆண்டுகளின் கணக்கீடுகளின் படி கோவையில், ஜனவரி மாதம் 29 முதல் 30 டிகிரி வெப்பமும், பிப்ரவரி மாதம் 30 முதல் 31 டிகிரி வெப்பமும், மார்ச் மாதம் 33 டிகிரியும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 37.5 டிகிரி வரையிலும் வெப்பம் பதிவாகி வருகிறது.  இன்றைய சூழலில் கோவையில் சுமார் 36 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. 




ஏன் இந்த வெப்பம் ?

வெப்ப நிலை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. நகர்ப்புறங்களில் அதிக கட்டிடங்கள் கட்டும்போது அவை வெப்பத்தை அதிகரிக்கின்றன அல்லது பிரதிபலிக்கின்றன. உதாரணமாக கோடைகாலத்தின் போது சாதாரண மண் தரையில் நடப்பதை விட , சிமெண்ட் தரையில் நடக்கும்போது அதிகமான வெப்பத்தை உணர முடியும்.  விவசாய நிலங்கள் மற்றும் அதிக பரப்பிலான நிலங்கள் காலியாக விடப்படும் போதும் வெப்ப நிலை அதிகரிக்கிறது. நீர் நிலைகள் வற்றிப் போகும்போது அந்த பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். ஏனென்றால், அதிக வெப்பம் வீசும் நேரத்தில் நீர் நிலைகளில் இருக்கும் நீர் ஆவியாகி வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது.

மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கம் என்று இவை அனைத்துமே காற்றில் மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற கழிவு வாயுக்களை அதிகரித்து விடுகிறது. இந்த வாயுக்கள் அனைத்தும் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை சிதறடித்து அதிகரிக்கச்செய்கிறது.  நடப்பு ஆண்டில் பருவ மழை மிகவும் குறைந்த காரணத்தினாலும் கோவையில் தற்போது அதிக வெப்பநிலை இருந்து வருகிறது. 

என்ன செய்ய வேண்டும்?

நகர்ப்புறங்களில்  அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் அதிக மரங்களை நடவு செய்ய வேண்டும். அதே போல மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரை நீர் நிலைகளுக்குள் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். இதற்காக அடைபட்டு கிடைக்கும் நீர் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்ட வேண்டும். இயற்கை வளங்களை முறையாக பராமரித்து  தட்பவெப்பநிலையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...