கோவையில் 15 அடி உயர டவரில் யோகாசனம் செய்து 12 வயது சிறுவன் உலக சாதனை

கோவையில் 15 அடி உயர டவரில் ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் நின்று 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன் யூனியன் உலக சாதனை படைத்தார். சுட்டெரிக்கும் வெயிலில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சர்வஜித் நாராயணன், 15 அடி உயரமான டவரில் நின்று கொண்டு ஹஸ்த கோணாசனத்தில் 7 நிமிடங்கள் 20 விநாடிகள் தொடர்ந்து நின்று யூனியன் உலக சாதனை படைத்தார்.

சரண்யா மற்றும் பாலசுந்தரம் தம்பதியரின் மகனான சர்வஜித், ஏழாம் வகுப்பு மாணவராக இருக்கிறார். சிறு வயதிலேயே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனைகள் உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



இந்த புதிய உலக சாதனை நிகழ்வு, சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட டவரின் மேல் ஏறிய சர்வஜித், அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தினார்.

ரஷ்யாவிலிருந்து வந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட், சர்வஜித்தின் சாதனையை நேரடியாக கண்காணித்தார். சாதனையை அங்கீகரித்த அவர், யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



சுட்டெரிக்கும் வெயிலில், 15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே சமநிலைப்படுத்தி ஆங்கிள் போஸில் யோகா செய்த சர்வஜித்தின் இந்த உலக சாதனையை, அவரது பள்ளியில் பயிலும் சக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...