குறிச்சி பகுதியில் தொடரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகோரி மாநகராட்சி அணையரிடம் மனு

கோவை மாவட்டம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 முதல் 100 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாணக் கோரி திமுக குறிச்சி பகுதி செயலாளர் நா.பிரபாகரன் தலைமையிலான திமுக-வினர் மாநகராட்சி அணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிச்சி நகராட்சியானது கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், ஆழியார் மற்றும் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டங்கள் இருந்தும் தற்போது குறிச்சி பகுதியில் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை 25 நாட்களுக்கும் மேலாக சேமித்து உபயோகப்படுத்துவதால் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியின் மற்ற வார்டுகளில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சியின் மற்றப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதைப் போலவே குறிச்சி பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய வேண்டும். 

மேலும், 3 நாட்களுக்கு ஒருமுறை வழக்கப்பட்டு வந்த கிணற்றுநீரும் தற்போது காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அத்யாவசியத் தேவைக்கும் கூட நீரின்றி சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே, லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியல் ஆதாயம் கருதி தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கின்றனர்.

அதேப்போல குறிச்சி பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமடைந்து உள்ளது. போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் துப்புரவு பணி மற்றும் வடிகால் சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் மந்தமாகவும், சரியான முறையிலும் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாகவும், தொற்றுநோய்கள் பரவுகின்றன. எனவே, சுகாதார பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேணடும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகப்படியாக ஏற்பட்டு வருகிறது. உடனடியாக மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும், குறிச்சி பகுதியிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் பயனற்று உள்ளது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிச்சி பகுதி திமுக செயலாளர் பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...