கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வந்தார். இன்று காலை முதல் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷ், மதியம் தனது விடுதி அறைக்குச் சென்றார்.

பின்னர், அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது சுபாஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...