ஆட்சியர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலை பெற்று கூலி அடிப்படையில், அதனை துணியாக நெசவுசெய்து கொடுத்துவருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலி தொகையை வழங்க வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த சில வாரங்களால வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சணைக்கு தீர்வுகாண ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா, தொழிலாளர் இணை ஆணையர் மாரிமுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அலுவலர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...