பொள்ளாச்சி நவமலையில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி நவமலை பகுதியில் மூன்று நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியை அடுத்த நவமலை சாலை ஓரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குட்டிகளுடன் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில் மின்வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நவமலை பகுதியில் உள்ள மாணவர்கள் படிப்புக்காக ஆழியார், அங்கலக்குறிச்சி மற்றும் கோட்டூர் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றனர்.



இந்நிலையில், ஆழியாரிலிருந்து நவமலை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக குட்டிகளுடன் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் கூட்டம், அங்குள்ள பலா மரங்களில் இருந்த பலாப்பழங்களை உண்டுள்ளது. இதனால் நவமலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் சுழற்சி முறையில் யானைக் கூட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...