கோவையில் நாட்டு வைத்தியரிடம் ரூ.40 லட்சம் மோசடி – அதிரடியாக மீட்ட கோவை சைபர் கிரைம் போலீசார்

சாய்பாபா காலனியில் சந்திரசேகர் என்ற நாட்டு வைத்தியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சம் பணத்தை மீட்டு கோவை சைபர் கிரைம் போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70). இவர் நாட்டு வைத்தியா். இவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசிய மா்ம நபா், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்கள் பெயரில் மும்பைக்கு வந்துள்ள கூரியரில் போதைப்பொருள் இருப்பதாகவும், இதனால் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரசேகரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.

அவரும், தனது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்துள்ளார். அதன்பின், சந்திரசேகரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்த்துவிட்டு திருப்பிவிடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகா் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்தை, அவா் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அவா் கூறியபடி பணத்தைத் திரும்ப அனுப்பவில்லை. பின்னர் இது குறித்து சைபா் கிரைம் போலீஸில், சந்திரசேகா் ஜூன் 13-ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட மா்ம நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கினா்.இதைத் தொடா்ந்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து நீதிமன்றத்தின் மூலம் ரூ.40 லட்சத்தை மீட்டு சந்திரசேகரிடம் அண்மையில் ஒப்படைத்தனா்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...