கோயமுத்தூர் கிட்னி சென்டரில் இயங்கிவரும் இரத்தம் மற்றும் இரத்தபுற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையம் சார்பில் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் குணமடைந்த இரத்த புற்றுநோயாளிக்கான திருமண தகவல் (வெப்சைடு) கோவையில் முதல்முறையாக தொடங்கப்படுகிறது. இதனை சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா வரும் ஏப்ரல் 21ம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து இரத்தநோய் சிகிச்சை நிபுணர் சுதந்திர கண்ணன் கூறுகையில்; இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்க்கான தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கு உதவுவதும், அவர்களின் தரத்தை உயர்த்துவதும் ஆகும். இரத்த புற்றுநோயானது குணபடுத்த கூடியது. பரவலாக குழந்தைகளை பாதிக்கும். இரத்தபுற்றுநோய் குழந்தைகளுக்கு 80-90% குணப்படுத்தக்கூடியது. இருந்தும் பெரியவர்களிடம் இந்நோயை குணப்படுத்தும் சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இதனை கண்டறிய இரத்த சோகை, காய்ச்சல், உடல் பாகங்களில் இருந்து இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்நோய்க்கு முதற்கட்ட சிகிச்சைக்கு பண உதவி இல்லாமையே பெரியவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். இந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இவ்வகை குழந்தைகளுக்கு உதவுவதே ஆகும்.
பிறப்பிலிருந்து பல குழந்தைகள் இரத்த நோயான தலசிமியாவால் பதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஒருமுறை ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. அவாறு செலுத்தினால் அவர்களின் ஆயுட்காலம் 30ம் வயதாகும். இதற்கு எலும்பு மஜ்சை மாற்று சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாகும். மேலும், பல ரத்தம் மற்றும் இரத்த வகை புற்றுநோய்கள் திருமண வயதில் தக்க கூடியவை. நோய் குணமடைந்தாலும் சமூக சூழ்நிலையினால் திருமண வரன் பார்க்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பல குணமடைந்த நோயாளிகளின் பெற்றோர் தகுந்த வரன் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவ்வகையான பிரச்சனைகளை களைய ரத்தம் மற்றும் இரத்த புற்றுநோய் அமைப்பு குணமடைந்த புற்றுநோயாளிகளுக்கு திருமண தகவல் மையம் ஏற்படுத்தி உள்ளது என்றார்.