கோவையில் நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை சுந்தராபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறையினர் நீட் தேர்வு முறைக்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


கோவை: 2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறைக்கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மற்றும் குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி இணைந்து கோவை சுந்தராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி,வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நீட் தேர்வில் முறைகேடுகள் செய்து மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஆரீப், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதால், நாடு முழுவதும், உள்ள பல்வேறு மாணவர்களின் கனவுகள் வீணாகி உள்ளதாகவும், பல்வேறு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி கூறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே நீட் தேர்வு முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...