கோவை ரெயில் நிலையத்தில் ரூ.25,000 பணம் மற்றும் 2 செல்போன் பறிப்பு - ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்க உதவுவதுபோல் நடித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த பிலாந்தரிடம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர் (35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று ஜூன்.24 அவர் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார். அப்போது ரயில் நிலையம் முன்பு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதற்கு உதவி புரிவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி பிலாந்தர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார்.அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலாந்தர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...