மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை அண்மையில் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளனர். இந்த பெயர்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.



இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.25 ஈடுபட்டனர். அப்போது சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களை மாற்றி பாசிச வடிவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு எதிர்ப்புகளை மீறியே இதனை ஒன்றிய அமல்படுத்துவதாகவும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...