கோவையில் கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்ற நான்கு பேரை சொக்கம்புதூர்-முத்தண்ணன் குளத்து சாலையில் போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை, சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் போலீஸார் ஜூன்.24 ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சஞ்சய்குமார்(24), தீத்திபாளையத்தைச் சோ்ந்த ஜலாலுதீன் (50), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சரவணகுமார் (40), செல்வபுரத்தைச் சோ்ந்த சல்புல்கான்(40) என்பது தெரியவந்தது.



இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனா். பின்னர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிடிபட்ட 4 பேரும் ரௌடி சஞ்சய் ராஜாவின் குழுவைச் சோ்ந்தவா்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...