கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – மக்கள் மகிழ்ச்சி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு திறந்த வெளி சிறை சாலை உள்ள நிலத்தை, சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு நிலம் மாறுதல் செய்வதற்கான நகர்வு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கோவை ஒண்டிப்புதூரில் கிரி்கெட் மைதானம் அமைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகரில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல்&டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், மத்திய சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டன.

மைதானம், வீரர்கள் காத்திருப்பு அறை, உடை மாற்றுவதற்கான அறை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விளையாட்டு துறை சார்பில் ஏற்கனவே தெரிவிககப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவையில் கடந்த ஜூன் 14ம் தேதி அன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை அறிவதற்காக, ஒண்டிப்புதூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கினோம் எனவும், "தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்வதை உறுதி செய்வோம் எனவும் அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட நாளன்று பதிவிட்டு இருந்தார்.

இது கோவை மக்களிடம் கிரிக்கெட் மைதானம் அமையும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்பொழுது இடம் தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள 20.72 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்குதிறந்த வெளி சிறை சாலை உள்ள நிலத்தை, சர்வதேச கிரி்கெட் மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு நிலம் மாறுதல் செய்வதற்கான நகர்வுகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கிரி்கெட் மைதானம் அமைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...