விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் - அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை; நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று அமைச்சர் அமித்ஷாவிடம் கோரப்படும். உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து நாளையே முதற்கட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அரசு, கள்ளச்சாராயம் காய்ச்சிய எத்தனை பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது?. விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதி உதவி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்காக அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் முதல்-அமைச்சர் இருக்கிறார். பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி பகுதி மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடன் இருக்க வேண்டும். மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த விவகாரத்தில் பாஜக அமைக்கும் குழு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...