ஆதிதிராவிடர் நலத்துறை என்பது உள்பட அரசு பள்ளி பெயர்களில் சாதி அடையாளங்கள் இருக்க கூடாது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை..!

மாணவர்களிடையே சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கம் ஏற்படுத்த, தேவையான வழிமுறைகளை வகுத்திட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்பித்தது.


சென்னை: கள்ளர் மறுவாழ்வு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என்பது உள்பட சாதி அடையாளங்கள் அரசு பள்ளிகளின் பெயர்களில் இருக்கக் கூடாது உட்பட பல்வேறு வழிமுறைகள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது. 

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்த்து,நல்லிணக்கம் ஏற்படுத்த, தேவையான வழிமுறைகளை வகுத்திட, ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவை தமிழ்நாடு அரசால் நியமித்தது. 

அதன்படி, இன்றுஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அரசு மற்றும்.தனியார் பள்ளிகளில் பின்பற்றவெண்டிய வழிமுறைகளை சமர்பித்தது. 

அந்த அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. 

தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்

குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. 

தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும்போதும் சாதி அடையாளங்கள் கூடாது.

ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். 

அரசு நடத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமுதாய பிரச்னைகள், சாதி பாகுபாடு, பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், போதை பொருள் தடுப்பு, எஸ்.சி & எஸ்.டிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். 

மாணவ- மாணவியர் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம்| உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். 

மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், போன்ற வழிமுறைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...