கோவையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், இன்று (18.06.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மைப்பணிகளுக்கு ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், 15726 எண்ணிக்கையிலான தளவாட பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார்தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக சுமார் 2220 நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தூய்மைப்பணியாளர்கள், பொதுசுகாதாரப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தேவைப்படும் தளவாட பொருட்களின் தொகுப்பாக கைசீமாறு 3195, ஜல்லை சீமாறு 2050, முறம் 985, 2 பள்ளு கொத்து 740, 4 பள்ளு கொத்து 560, மண்வெட்டி 754, மூங்கில் கூடை பெரியது 1210, மூங்கில் கூடை சிறியது 1180, சாக்கடை பலகை 760, பிளாஸ்டிக் சட்டி 1952, ரோடு கூட்டும் பிரஸ் 1000, வீச்சு 400, அருவாள் 605 மற்றும் கடப்பாறை 335 என மொத்தம் 15726 எண்ணிக்கைகளான பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.



உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...