மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்க கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் செல்கிறார்

கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் நோக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 19 ஜூன் 2024 அன்று மற்றும் அன்று மாலை நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.


கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, வரும் ஜூன் 19 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அங்கு நேரில் அதிகாரிகளுடன் செல்கிறார்.

முதல் கட்டமாக 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை வெவ்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள்.இதே போல மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். 

இதனால் மதுக்கரை தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் பயனடைய உள்ளது. உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுக்கரையில் 19.6.2024 காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஆட்சியர் அங்கு தங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...