பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் சாலையில் கவிழ்ந்த முட்டை வேன் - ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டை சேதம்

கள்ளகிணறு என்ற பகுதியில் அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற வேன், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் பல்லடத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த முட்டை வேன், அரசு பேருந்து வாகனத்தை முந்தும் போது விபத்து ஏற்பட்டு நடுரோட்டில் முட்டை வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உயிர் தப்பினர்.



ராஜபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அதன் முன்னால் தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கேட்சரிஸ் வேன் ஒன்றன்பின் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து இந்த வேனை முந்த முயற்சித்துள்ளது.



அப்போது வேனின் ஓட்டுநர் கட் அடித்ததாகவும் இதனால் நடுரோட்டில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.



இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...