கோவை மசக்காளிபாளையத்தில் தென்பட்ட அரிதான வெள்ளிக்கோல் வரையான் பாம்பு (ஓநாய் பாம்பு)

மசக்காளிபாளையத்தில் பூந்தொட்டி கடையில் பதுங்கியிருந்த வெள்ளிக்கோல் வரையான் பாம்பை, பாம்பு பிடி வீரர் சித்ரன் பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்துள்ளார்.


கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது.

தகவலின் அடிப்படையில் மசக்காளிபாளையம் பகுதிக்கு சென்ற சித்திரன், அங்கு பூந்தொட்டி செடியில் இருந்த பாம்பை பார்த்தார். அப்போது அந்த பாம்பு விஷமற்ற அரிதாக தென்படும் மரமணு குறைபாடுடைய வெள்ளிக்கோல் வரையான் பாம்பு என்பது தெரிய வந்தது.



இதனை ஓநாய் பாம்பு என்றும் அழைக்கப்படுகின்றன. வழக்கமாக வெள்ளிக் கோல் வரையான் பாம்புகள் உடல் மீது கட்டுக்கட்டாக தழும்பு பட்டைகள் இருக்கும். ஆனால் நாகப்பாம்பில் மரபணு குறைபாடுடன் உள்ள பாம்பு வெள்ளை நாகம். அதுபோன்று மரபணு குறைபாடுடன் உள்ள வெள்ளிக்கோல்வரையான் பாம்புகளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல உலாவும்.

இது அரிதாக தென்படும். இந்த நிலையிலே, மரபணு குறைபாடுனனான வெள்ளிக்கோல்வரையான் பாம்பு, கோவை மசக்காளிபாளையத்தில் தென்பட்டிருக்கிறது. இந்த பாம்பை பிடித்து வனத்துறையில் தகவல் சொல்லப்பட்டு, அதன் வாழ்விடத்தில் விடப்பட்டது. இது போன்ற பாம்புகள் தென்படும் பொழுது, பொதுமக்கள் அதனை அடிக்கவோ, விரட்டவோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர்களுக்கும், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கும் உரிய தகவல் தரும் பட்சத்தில், அது பத்திரமாக மீட்கப்படும். பொது மக்களுக்கும் பாம்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் அதன் வாழ்விடத்தில் விடப்படும் என்று பாம்பு பிடி வீரர் சித்ரன் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...