விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது; கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்த போது, முதலமைச்சர் ஸ்டாலினின் மக்களுக்கான பணிகளையும், திட்டங்களையும் விளக்கினார். இது அவர்களின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.


கோவை: அதிமுக வின் சூழ்நிலையை மனதில் வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு செய்கின்ற பணி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ அதை தீர்க்க வேண்டும் அவர்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் யோசித்து அதை செய்ய வேண்டும் என்று அவர் செய்கின்ற காரணத்தினால் தான் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அவருக்கு ஒரு நன்றி பாராட்ட வேண்டும் என்று சொன்னபோது கூட அவர் வேண்டாம் என்று சொல்லி புறப்பட்டு சென்று விட்ட நிலையில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் எல்லாம் பேசித்தான் பிறகு அதனை ஏற்றுக்கொண்டார் என்றும் அந்த அளவிற்கு அவர் எதையும் தன்னடக்கத்துடன் செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுவதும் வெற்றி பெற்ற ஒரு மாநிலம் எங்கும் கிடையாது அதை முதலமைச்சர் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார் எனவும் அதற்கு காரணம் அவர் மக்களுக்கு செய்த சேவையும் மேலும் சேவை செய்வார் என்று மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையும் தான் எனவும் கூறினார். மேலும் கட்சியில் இருக்கின்ற அடிமட்ட சகோதரர்கள் உடன்பிறப்புகள் செய்த பணிதான் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதால் தனக்கு என்ன பாராட்டுகளை கொடுத்தாலும் நான் அவர்களுக்கு கொடுக்கிறேன் என்று முதல்வர் கூறியதாகவும் எனவே அப்படிப்பட்ட தலைவர் உள்ள காரணத்தினால் தான் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று இருக்கிறோம் என்றும் பெருமிதம் கொண்டார்.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அதிமுக எடுத்துள்ள முடிவு அவர்கள் சூழ்நிலையை மனதில் வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுக வால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள் இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். மேலும் வருகிற 2026ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அதிமுக சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கலாமே தவிர அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை எனவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில் நிச்சயமாக இதைவிட பெரிய வெற்றியாக தான் இருக்கும் என்றும் கூறியதுடன், இந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் செய்யக்கூடிய பணிகள் அந்த வெற்றிக்கு இன்னும் கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...