நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிக்கத்தான் – கோவையில் செல்வ பெருந்தகை பேட்டி

நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான். பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் இந்த நீட் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும், முதலமைச்சரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் எனவும், மூன்று ஆண்டு ஆட்சிக்கு சான்றிதழாக மக்கள் 40/40 வெற்றியை தந்திருக்கிறார்கள் எனவும் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஒருபோதும் தமிழ் மண்ணில் பாசிசமும், பாஜகவும் காலூன்ற முடியாது என கோவை வந்த ராகுல்காந்தி கூறியதாக சுட்டிக்காட்டியதுடன், அதன் அடிப்படையில் 40க்கு 40 வெற்றியை பெற்று இருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த செல்வ பெருந்தகை, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு காரணம் முழுக்க முழுக்க மக்கள் பலமும், மூன்று ஆண்டு ஆட்சி கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

மேலும் திமுக கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது எனவும், தாங்களெல்லாம் தோழமையாக இருக்கிறோம், உண்மையாக இருக்கிறோம், கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ்நாட்டில் நல்லாட்சியை கொடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை பாஜக அரசு திட்டமிட்டு ஏழை எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக நடத்தி வருகிறது எனவும், இதில் ஆள் மாறாட்டம் இருக்கிறது, பணபலம் இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம் எனவும், தமிழ் குழந்தைகளை தொடர்ந்து மரணத்திற்கு ஆளாக்க வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

இதேபோல் நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடு தான் நீட்,நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என்றும் குற்றம் சாட்டியதுடன், பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் இந்த நீட் எனவும் அவர் விமர்சித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...