ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...