கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவையில் மின்னொளி கைப்பந்து போட்டி தொடக்கம்

3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி எக்சளன்ஸ் அணி, கோவை நிர்மலா கல்லூரி அணி, ஆத்தூர் பாரதியார் அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி உள்ளிட்ட அணிகள் விளையாட உள்ளன.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் கோப்பைக்கான பகல் மற்றும் மின்னொளியில் நடைபெறும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் கோவை கணுவாய் கே.சி.கே திருமண மண்டப வளாகத்தில் இன்று காலை தொடங்கியது.



3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி எக்சளன்ஸ் அணி, கோவை நிர்மலா கல்லூரி அணி, ஆத்தூர் பாரதியார் அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி அணிகளும், மாவட்ட அளவிலான போட்டிகளில் ஏ.பி.சி பள்ளி, அகர்வால் பள்ளி, தடாகம் அரசு பள்ளி, விவேகம் பள்ளி, கீர்த்திமான் பள்ளி உள்ளிட்ட 16 அணிகள் மோதுகின்றன.



மாவட்ட அளவிலான முதல் போட்டியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், கைப்பந்து அடித்தும் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, விவசாய அணி எஸ்.கே.சோமசுந்தரம், ஆர்.எம்.டிரேடர்ஸ் ராஜா, பிரேமாவதி, கந்தசாமி, காளையனூர் ஜீவாநந்தம், பிரவின், அசோக் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் மாநில அளவில் வெற்றி பெரும் முதல் அணிக்கு ரூ.25101 மற்றும் கோப்பையும், 2வது இடம் பெரும் அணிக்கு ரூ.20101 மற்றும் கோப்பையும், 3வது இடம் பெரும் அணிக்கு ரூ.15101 மற்றும் கோப்பையும், 4வது இடம் பெரும் அணிக்கு ரூ. 12101 மற்றும் கோப்பையும், 5வது இடம் பெரும் அணிக்கு ரூ.8101 மற்றும் கோப்பையும், அதேபோல், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5101 மற்றும் கோப்பையும், 2வது பரிசாக ரூ.4101 மற்றும் கோப்பையும், 3வது பரிசாக ரூ.3101 மற்றும் கோப்பையும், 4வது பரிசாக ரூ.2101 மற்றும் கோப்பையும், அத்துடன் நடுவர்களுக்கு பரிசுகள், சிறந்த விளையாட்டு வீரருக்கான 5 பரிசுகள், மாநில அளவிலான 5 அணிகளுக்கும் பயணத்தொகை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட வந்த வீராங்கணைகளுக்கு தங்க இடம் அளித்து, உணவும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.சி.கே.தனக்குமார் செய்திருந்தார்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...