கோவையில் சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கம்

கோவை தெற்கு மண்டலத்துக்கு உட்பட 7 வார்டுகளில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 25 வார்டுகளில் 5 முதல் 6 நாள்களுக்கு ஒருமுறையும், 75 வார்டுகளில் 4 நாள்களுக்கு ஒரு முறையும் தற்போது குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று ஜூன்.13 செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,கோவை மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மழை பெய்துள்ளதாலும், அணை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றாலும் குடிநீா் விநியோகம் சீரடைந்துள்ளது.

தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 7 வார்டுகளில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாநகராட்சியில் உள்ள 25 வார்டுகளில் 5 முதல் 6 நாள்களுக்கு ஒருமுறையும், 75 வார்டுகளில் 4 நாள்களுக்கு ஒரு முறையும் தற்போது குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

உக்கடம் பகுதியில் முக்கிய பண்டிகை நாள்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். அதனால் அங்கு 100 மீ. நீளத்துக்கு ரூ.7 கோடி மதிப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் 1245 சாலைப் பணிகள் ரூ.98.95 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க கூடுதலாக வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ராஜ வீதி, புரூக் பாண்ட் சாலை, கிராஸ்கட் சாலை போன்ற பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், அங்கு மாநகராட்சிக்கு வருமானம் ஏற்பத்தும் வகையில் வணிக வளாகம் கட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் இதுவரை ரூ.53.22 லட்சம் செலவில் 7,603 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளலூரில் 50 ஏக்கர் நிலத்தில் ரூ.150 கோடியில் சூரிய ஒளி மின் வசதி (சோலார் யூனிட்) அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி, அந்த மின்சாரத்தை போத்தனூா் துணை மின் நிலையத்துக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உக்கடம் மீன் மார்க்கெட் திறப்பது குறித்து அரசுக்கு கருத்து அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மாநகரில் 5700 தூய்மைப் பணியாளா்கள் உள்ளனா். தினமும் 1,200 டன் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குப்பைக் கிடங்கில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க தண்ணீா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இனி தீ விபத்து ஏற்பட்டால் மாநகராட்சி ஊழியா்களே அதை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24ஆம் ஆண்டு மாநகரப் பகுதியில் டெங்கு காய்ச்சலால் 2020 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். நிகழாண்டில் இதுவரை 1220 போ் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். ஜூன் மாதத்தில் 41 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்ந்துள்ளனா். மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைக் கொட்டியவா்களிடம் இருந்து ரூ.16 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...