தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது

கோவை கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற எம்.டி.ஏ மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை எம்.டி.ஏ. மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், கோவை கிராண்ட் ஹோட்டலில் இன்று ஜூன்.13 நடைபெற்ற 9-வது பொதுக்குழுவில் சமூக சேவைக்கான விருதுகள் தமுமுகவின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

எம்.டி.ஏ. அசோசியேசன் தலைவர் பிரோஸ் காண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோவை மத்திய மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ பணிகள், ரத்ததான முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவிகள், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு தமுமுகவை கவுரவப்படுத்தி இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கோவை சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம் அவர்கள், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஷகீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஆசிக் அகமது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சபீர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர் கே ஜி ராமமூர்த்தி, மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...