சின்னத்தடாகம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதியின் பிறந்நாளை முன்னிட்டும், தடாகம் மூங்கூரகவுடர் நினைவாகவும், சி.எம்.கே குரூப் ஆப் கம்பெனி சார்பாக சின்னத்தடாகம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பாக்ஸ், புத்தகபை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை சின்னத்தடாகம் அரசு ஆரம்ப்பள்ளியில் திமுக முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டும், தடாகம் மூங்கூரகவுடர் நினைவாகவும், சி.எம்.கே குரூப் ஆப் கம்பெனி சார்பாக முதலாவது ஆண்டாக 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பாக்ஸ், புத்தகபை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.



கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டும், தடாகம் மூங்கூரகவுடர் நினைவாகவும் சி.எம்.கே குரூப் ஆப் கம்பெனி சார்பாக முதலாவது ஆண்டாக கோவை தடாகம் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உட்கார்ந்து படிக்க பாய்கள், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பாக்ஸ், புத்தகபை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா அனைவரையும் வரவேற்று பேசினார்.



சி.எம்.கே குரூப் ஆப் கம்பெனி தலைவர் மற்றும் திமுக பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.



திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.



தொடர்ந்து பள்ளியின் சுற்றுச்சுவர் புணரமைக்க ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். மேற்கொண்டு சுற்றுச்சுவர் அமைக்க தேவையான அனைத்து உதவிகளை செய்ய சி.எம்.கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.



மேலும் மாற்றுதிறனாளி ஒருவருக்கு ஊன்றுக்கோல் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், கலை இலக்கிய பாசறை தலைவர் டி.வி.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேசவமணி, தொண்டாமுத்தூர் தியாகு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், விவசாய அணி கனகராஜ், வீரபாண்டி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, நஞ்சுண்டபுரம் ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே கதிர்வேல், சார்பு அணி நிர்வாகிகள் டி.எஸ்.பி.அருண்பிரசாத், மாணிக்கம் மயில்சாமி, செல்வராஜ், முத்துக்குமார், கார்த்திக்குமார், தனக்குமார், பி.டி.கோபாலசாமி, கே.என்.ஜி. புதூர் ஆனந்த், விஜயராணி, செலினா, ஆசிரியர் பழனிசாமி, கதிர்வேல், சோமசுந்தரம், ஜீவானந்தம், சரவணகுமார், பாபு, பிரனேஷ், மூத்த முன்னோடிகள் தடாகம் ராமு, பெருமாள்சாமி, நிர்வாகிகள் பிரபாவதி, ராஜ்கோபால், ஜெகன்பிரசாத், சம்பத், ராஜா, முத்துக்குமார், பாலமலை, அனுசுயா, பிரவீன், செளந்தரராஜ், கணேஷ், ராஜேந்திரன், சின்னராஜ், முத்துசாமி, வேலுமணி, ரமேஷ்வரன், தடாகம் பகுதியை சேர்ந்த பொது அமைப்பினர், நடைபயிற்சி நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...